சென்னை: திருவல்லிக்கேணி பெரிய தெருவை சேர்ந்த சரிதா (43), கடந்த 23ம் தேதி வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், 2 செல்போன்கள், ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றனர். புகாரின் பேரில், திருவல்லிக்கேணி விசாரணை நடத்தினர். அதில், ராயப்பேட்டையை சேர்ந்த பரோஸ் பாஷா (39) மற்றும் 15 வயது சிறுவன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.
Advertisement


