வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா கல்லப்பாடியை சேர்ந்தவர் சுப்பிரமணி(55). இவரது மகன் பூபாலன்(25), விவசாயக் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 2013ல் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலையை அங்குள்ள குட்டையில் கரைத்து விட்டு இரவில் நண்பர்களுடன் திரும்பி கொண்டிருந்தார். அப்போது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
நண்பர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுதொடர்பாக பரதராமி போலீசார், நிலத்தில் மின்வேலி அமைத்த விவசாயி பூபதி(61) மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை வேலூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் விசாரித்து 5 ஆண்டு சிறை தண்டனையும், ₹40 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.