ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தாவர அறிவியல் மற்றம் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
A. Technical Assistant
i) Chemistry: 1 இடம் (பொது).
ii) Bio-Technology: 1 இடம் (எஸ்சி)
iii) Botany: 1 இடம் (ஒபிசி)
வயது: 21 லிருந்து 30க்குள். தகுதி: Chemistry/Chemical Engineering/Bio-Technology/Botany பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
B. Technician (Mechanic Machine Tool Maintenance): 4 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 18 லிருந்து 30க்குள்.
தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பணிக்கேற்ற பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
C. Technician:
i) Boileman : 2 இடங்கள் (பொது).
ii) Electrician: 2 இடங்கள் (ஒபிசி)
iii) Machinist: 1 இடம் (பொது)
iv) Carpenter: 1 இடம் (எஸ்சி)
வயது: 18 லிருந்து 30க்குள்.
தகுதி: 60% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பணிக்கேற்ற பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
D. Driver (Ordinary Grade): 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மோட்டார் மெக்கானிசத்தில் அறிவுத் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ₹1000/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு ₹600/-. இதை The Director, Institute of Wood Science & Technology என்ற பெயரில் பெங்களூருவில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பத்தை www.iwst.icfre.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் டைப் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
ICFRE- Institute of Wood Science & Technology, 18th cross, Malleswaram, BENGALURU- 560 003.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.10.2023.