*சுற்றுலா பயணிகள் சிரமம்
ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. இப்பூங்காவின் பல இடங்களில் பல்வேறு வகையான அரிய தாவரங்கள், மரங்கள் உள்ளன. இந்நிலையில் இந்தாண்டுக்கான பருவமழை கடந்த மே மாதத்தில் துவங்கியது.
பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ராட்சத மரங்கள் சாலைகளிலும், குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் மீதும் விழுந்தன. ஊட்டிக்கு சுற்றுலா வந்த கேரள சிறுவனும் மரம் விழுந்து உயிரிழந்தார்.
இதனிடையே ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் மேற்புறம் இத்தாலியன் கார்டன் பகுதியில் இருந்து கள்ளிச்செடிகள் மாளிகை மற்றும் சன்கென் கார்டன் செல்லும் பகுதியில் நடைபாதையின் குறுக்கே ராட்சத கற்பூர மரம் ஒன்று விழுந்துள்ளது.
இதனால் இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் மரம் விழுந்து பல நாட்களான நிலையில் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. எனவே நடைபாைதயின் குறுக்கே விழுந்த மரத்தை வெட்டி அகற்றிட வேண்டும் ன வலியுறுத்தப்பட்டுள்ளது.