திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 28: பூதலூர் எஸ்எஸ்பி காலனியை சேர்ந்தவர் ஜெயராணி (65). இவர் தனது மகன் தினகரனுடன் செங்கிப்பட்டி கூட்டுறவு கடன் மையத்தில் உரம் வாங்குவதற்காக சென்று விட்டு பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆவாரம்பட்டி பிரிவு சாலை அருகே, பின்னால் பைக்கில் வந்த வாலிபர்கள் இரண்டு பேர் இவர்களது வண்டியை மறித்து ஜெயராணி கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சித்தனர். அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஜெயராணி பூதலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.