தென்காசி: இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் வீரமுழக்கமிட்ட மாவீரன் பூலித்தேவரின் 309வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே நெற்கட்டும்செவலில் உள்ள மாமன்னன் பூலித்தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் நேற்று காலை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், ராணி ஸ்ரீகுமார் எம்பி, எம்எல்ஏக்கள் ராஜா,தங்கப்பாண்டியன், தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், உதயகுமார், செல்லூர் ராஜூ , எம்எல்ஏ கிருஷ்ணமுரளி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எம்எல்ஏ மனோஜ்பாண்டியன், தர்மர் எம்பி, முன்னாள் எம்எல்ஏ மனோகரன் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் முகாம் அலுவலகத்தில் நேற்று காலை அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூலித்தேவர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.