திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மாநில துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா வீடான பிரஜா பவன் உள்ளது. இங்கு நேற்றுமதியம் பரஜா பவனில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் பிரஜா பவன் வெடித்துவிடும் என்றும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் போன் வந்தது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக உஷார்படுத்தப்பட்டு வீட்டில் உள்ள அனைவரையும் அவசரமாக பாதுகாப்பாக வெளியேற்றினர். பின்னர் அதிகாரிகள் வெடிகுண்டு தடுப்பு பிரிவு உதவியுடன் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.