மும்பை: மும்பையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் விமானம் திருவனந்தபுரத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.