நெல்லை: நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னையிலுள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை வந்த செல்போன் அழைப்பில், நெல்லை சந்திப்பு ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு வெடித்து சிதற போகிறது என கூறிவிட்டு சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
தகவலறிந்து நெல்லை மாநகர போலீசார் ரயில்வே ஸ்டேஷனில் 2 மணி நேரம் நடத்திய சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. விசாரணையில் நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த சிவபெருமாள் (40) போதையில் மிரட்டல் விட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.