சென்னை: சென்னை எண்ணூரில் வீட்டில் பள்ளம் தோண்டும்போது கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு செயலிழப்பு செய்யப்பட்டது. மே 21ல் முஸ்தபா என்பவரின் வீட்டை பராமரிக்க பள்ளம் தோண்டியபோது வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. ஆவடியில் இருந்து வந்த கமாண்டோ படையினர் வெடிகுண்டை சோதனைக்காக கொண்டு சென்றனர். ஏரியல் பாம் என கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு அது செயலிழக்க வைக்கப்பட்டது. திருவொற்றியூர் சாத்தாங்காடு கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் காலியான இடத்தில் செயலிழக்க வைக்கப்பட்டது.
எண்ணூரில் வீட்டில் பள்ளம் தோண்டும்போது கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு செயலிழப்பு
0