Monday, February 26, 2024
Home » மாமல்லபுரம் அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியின் சடலம் மீட்பு

மாமல்லபுரம் அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியின் சடலம் மீட்பு

by Ranjith

மாமல்லபுரம்: மடிப்பாக்கம் பாரத் நகரைச் சேர்ந்தவர் சுவக்சா (19). இவரும், ஊர் பெயர் தெரியாத கார்த்திக் (19) என்ற மாணவனும் திருப்போரூர் அடுத்த காலவாக்கம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் நேற்று தனித்தனி சைக்கிள்களில் மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு மீனவ குப்பத்துக்கு வந்துள்ளனர். அப்போது, அங்குள்ள கடற்கரை மணலில் ‘எவர் 2024’ என எழுதி வைத்துவிட்டு, கடலில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது.

இதில், கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சுவக்சாவின் சடலம் நேற்று மாலை சூளேரிக்காடு பகுதியில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து, தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் சுவக்சா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கடற்கரையில் இருந்த 2 சைக்கிள், கல்லூரி பேக், காலணிகள், கல்லூரி அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து, மீனவர்கள் உதவியுடன் மாணவன் கார்த்திக் உடலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

four × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi