கோவை: நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பவபூரணி (29). இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில், மயக்கவியல் துறையில் முதுகலை படிப்பு பயின்று வந்தார். அவர், நேற்று முன்தினம் இரவு பயிற்சிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றினார்.
இந்நிலையில் நேற்று காலை மருத்துவமனை கழிவறையில் பவபூரணி மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதனை பார்த்த ஊழியர்கள் மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்தபோது, பவபூரணி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து பீளமேடு போலீசார், அவரது உடலை கைப்பற்றி வரதராஜபுரம் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.