சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முன்னோட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடந்த ஒத்திகையை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். இந்த பணிகளுக்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 டிரோன்கள் தயார் நிலையில் இருந்தன. இதன் மூலமாக பால், பிரட் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல முடியும். இவை 40மீ. உயரத்தில் 2 கி.மீ. தூரம் வரை பறக்கும் சக்தி உடையது. ஆய்வின்போது துணைமேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) ஜெயசந்திரபானு ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
படகுகள் செல்ல முடியாத பகுதிகளில் டிரோன்கள் மூலம் உணவு வழங்க மாநகராட்சி திட்டம்
0