Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

படகில் இருந்து கடலில் விழுந்த மீனவர் மரணம்

குளச்சல் : குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே இனயத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய நிதின் (27) திருமணமாகாதவர்.இவர் நேற்று முன்தினம் அதிகாலை தேங்காப்பட்டணம் கடலில் மீன் பிடிக்க படகில் சென்றார். 5 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கடலில் விழுந்தார்.

அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் கடலில் இறங்கி தேடினர். ஆனால், அவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் ஆரோக்கிய நிதின் சடலத்தை மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.