கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி இழை பாலம் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய படகுகள் இயக்கப்படுகின்றன. சாதாரண பயணிகளுக்கு ரூ.75ம், மாணவர்களுக்கு ரூ.30ம், கியூவில் நிற்காமல் செல்லும் சிறப்பு கட்டணமாக ரூ.300ம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு பயண கட்டணம் ஜூன் 5 ம் தேதி (நாளை) முதல் உயர்த்தப்படுகிறது. சாதாரண பயணிகளுக்கான கட்டணம் ₹75 லிருந்து ₹100 ஆக உயருகிறது. மாணவர்களுக்கு சலுகை கட்டணம் 30ல் இருந்து ₹40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கட்டணம் ₹300ல் எந்த மாற்றமும் இல்லை.
குமரியில் படகு கட்டணம் நாளை முதல் உயர்வு
0