பிஎம்டபிள்யூ நிறுவனம், ஜி310 ஜிஎஸ் மற்றும் ஜி310 ஆர் ஆகிய மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்கள் 2018ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டவை. புதிய ஓபிடி – 2பி வாகன விதிகள் காரணமாக இவை கைவிடப்படுவதாகவும், இந்த மோட்டார் சைக்கிள்களை சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளும் முடிவு ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வருவதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவன இணையதளத்தில் இருந்தும் இவை நீக்கப்பட்டு விட்டன. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 அடிப்படையில் ஜி 310 ஜிஎஸ் மோட்டார் சைக்கிளும், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 அடிப்படையில் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்ஆர் மாடலும் தயாரிக்கப்பட்டவை. விரைவில் எப் 450 ஜிஎஸ் பைக்கை சந்தைப்படுத்த பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.