சேலம்: சேலம் குரங்குச்சாவடி நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (57). கார்களுக்கு கண்ணாடி விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று காலை கோயிலுக்கு செல்வதற்காக காரை எடுத்துள்ளார். அப்போது காரில் இருந்த புளூடூத் ஸ்பீக்கர் திடீரென வெடித்து புகை வந்துள்ளது. இதனால் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் உடனடியாக இறங்கி தப்பினார். தகவலறிந்து சூரமங்கலம் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்தில் வெங்கடேசனுக்கு நெற்றி, காது, கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.
புளூடூத் ஸ்பீக்கர் வெடித்து கார் எரிந்து நாசம்
145