தேவையான பொருட்கள் :
புளு பெர்ரி – 50 கிராம்
அவகேடோ – 1
வாழைப்பழம் – 2
தேங்காய்ப் பால் – 1 கப்
தேன் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
ஒரு பவுலில் தேங்காய்ப் பால் ஊற்றி, அவகேடோவை தோல் நீக்கி மசித்து சேர்க்கவும். வாழைப் பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி போடவும். புளு பெர்ரியையும் சேர்க்கவும். தேன் ஊற்றி நன்கு கலக்கி பரிமாறவும். சுவையான புளு பெர்ரி சாலட் தயார்.