தேவையானவை:
பச்சரிசி-ஒரு கப்,
புழுங்கலரிசி-ஒரு கப்,
உளுத்தம்பருப்பு-கால் கப்,
வெந்தயம்-ஒரு டீஸ்பூன்,
கருப்பட்டி (பொடித்தது)-2 கப்,
புளிக்கவைத்த இளநீர்-அரை கப்,
எண்ணெய்-சிறிதளவு.
செய்முறை:
அரிசி, பருப்பு, வெந்தயம் மூன்றையும் சேர்த்து ஊறவையுங்கள். ஒரு மணி நேரம்ஊறிய பிறகு, நைஸாக அரைத்தெடுங்கள். இளநீரை, முதல்நாளே வாங்கிவைத்துப் புளிக்கவைக்கவேண்டும். புளித்த அந்த இளநீரை மாவில் ஊற்றிக் கரைத்துவையுங்கள். 6 முதல் 8 மணி நேரம்மாவு புளிக்க வேண்டும். கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து,கொதித்ததும் அப்படியே சூடாக வடிகட்டி, மாவில் சேருங்கள்.நன்கு கரைத்த மாவை, ஆப்பச்சட்டியில் லேசாக எண்ணெய் தடவி, ஆப்பமாக ஊற்றி வெந்ததும்எடுத்துப் பரிமாற்றூங்கள். மிகவும் மிருதுவாக இருக்கும் இந்த ஆப்பம், அடுத்த நாள் வரையிலும்நன்றாக இருக்கும்.