கறுப்பு கொண்டக்கடலை கால் கப்
கேரட் துருவல் 1 தேக்கரண்டி
பச்சை குடைமிளகாய் 2 தேக்கரண்டி
மஞ்சள் குடைமிளகாய் 2 தேக்கரண்டி
சிகப்பு குடைமிளகாய்- 2 தேக்கரண்டி
மாதுளை முத்துக்கள் 2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
தக்காளி – 1வெள்ளரிக்காய் பாதி அளவு
முட்டைக் கோஸ்- 2 தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு அரை தேக்கரண்டி
பிங்க் சால்ட் அரை தேக்கரண்டி
ஓரிகனோ கால் தேக்கரண்டி
மிளகுத் தூள் அரை தேக்கரண்டி.
செய்முறை:
கறுப்பு கொண்டைக் கடலையை ஊற வைத்து முளைக்கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர், மேலே சொன்ன அனைத்து காய்களையும் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் ஒன்றாக சேர்க்கவும். நறுக்கிய காய்கறிகளுடன் உப்பும் மிளகுத்தூளும் சேர்த்து கலந்து விடவும். இறுதியாக ஓரிகனோவும் எலுமிச்சைப் பழ சாறும் சேர்த்து கலந்தால் சாலட் தயார்.