விழுப்புரம்: விழுப்புரத்தில் நடிகரும், பாஜ பிரமுகருமான சரத்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 2026 சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பதை பாஜ தலைமையிடம் கேட்டு பதிலை கூறுகிறேன். அமித்ஷா நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தது, ஆனால் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவரின் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியிருந்ததால் அங்கு செல்லவில்லை. கர்நாடகம், தமிழகம் இடையே பிரச்னையை ஏற்படுத்தும் விதமாக கமலின் சொல் அமைந்துவிட்டது. அது தேவையா? என்பதை யோசித்து பார்க்க வேண்டும். எல்லாமே செம்மொழி தான். கன்னடத்துக்கு கன்னடம் செம்மொழி தான்.
சமஸ்கிருதத்துக்கு சமஸ்கிருதம் செம்மொழி தான். இவ்வாறு அவர் கூறினார். பாமகவை மிரட்டி கூட்டணி அமைக்க பாஜ முயற்சிப்பதாக கூறப்படுகிறதே என கேட்டபோது, பாமகவில் தந்தை, மகன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நிச்சயம் கட்சியை உடைப்பதற்கு யாரும் நினைக்க மாட்டார்கள். தந்தை, மகனிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து அவர்கள் யாருடன் கூட்டணி என்பதை ஒற்றுமையாக முடிவெடுக்க வேண்டும் என்றார்.