துரைப்பாக்கம்: ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அலிஷா அப்துல்லா. தமிழக பாஜ திறன் மற்றும் விளையாட்டு பிரிவு செயலாளராக உள்ளார். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒருவர் தொடர்ச்சியாக ஆபாச மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். மேலும், நேரில் வரும்படியும், மசாஜ் செய்து விடும்படிம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அலிஷா, கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையல், ஆலிசா அந்த நபரை தொடர்பு கொண்டு பேசியபோது, ஏகாட்டூரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி, நேற்று அங்கு சென்று அலிஷா, அந்த நபரை பிடித்து, நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவருக்கு எக்ஸ் தளத்தில் புகார் செய்தார். விசாரணையில், அந்த நபர் ஊரப்பாக்கத்தை சேர்ந்த சரஸ் என்றும், அவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிய வந்தது. அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜ மாநில நிர்வாகி அலிஷா அப்துல்லாவுக்கு பாலியல் தொல்லை: வாலிபரிடம் விசாரணை
0