சென்னை: மத்திய பாஜக ஆட்சியில் இந்தியாவின் கடன் ரூ.168 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மசோதா நிறைவேறும்போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது அதிமுகவை பாஜக விமர்சிப்பது இரட்டை வேடம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அரசிடம் இருந்து எந்த திட்டங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். தமிழ்நாட்டு மக்களின் வாக்குகள் மட்டும் பாஜகவுக்கு தேவை; ஆனால் தமிழ்நாட்டுக்கான திட்டங்களை புறக்கணிப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.