டெல்லி: பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றசாட்டியுள்ளார். சிறுபான்மையினர் மீதான தாக்குதலை அரசு வாய்மூடி கொண்டு வேடிக்கை பார்க்கிறது. சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக எவ்வளவு முயன்றாலும் வெறுப்புக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைப்பதில் நாம் வெற்றி பெறுவோம். இந்தியர்களின் உரிமை, ஒற்றுமை மீதான தாக்குதல் என்பது அரசமைப்பு மீதான தாக்குதலாகும்