சென்னை: பாஜக அரசியல்வாதியாக ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார் என்று சி.பி.எம். நாகை மாலி தெரிவித்துள்ளார். ஜனநாயக மாண்புகளை புறந்தள்ளிவிட்டு செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி போல் எந்த மாநிலத்திலும் ஆளுநர் இல்லை. எந்தவித அதிகாரமும் இல்லாத ஒருவர் சகலவிதமான அதிகாரத்தையும் கையில் எடுப்பேன் என்பதை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது என்று நாகை மாலி தெரிவித்திருக்கிறார்.