டெல்லி: பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி மீது உரிமை மீறல் நடவடிக்கை கோரி மக்களவை சபாநாயகர் ஒம்பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார். மக்களவையில் பிஎஸ்பி எம்.பி. டேனிஷ் அலியை அநாகரிகமாக பேசிய ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.