டெல்லி: பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சன்னி தியோலின் வீடு ஏல அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது ஏன்? தொழில்நுட்ப கோளாறால் ஏலம் வாபஸ் ஆனது எப்படி? என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். ரூ.56 கோடி கடனை செலுத்தாததால் பாஜக எம்.பி. சன்னி தியோலின் மும்பை சொகுசு பங்களாவை ஏலம் விடுவதாக அறிவித்ததை பேங்க் ஆஃப் பரோடா திரும்பப் பெற்றது.