திருப்பூர்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியை கொண்டாடும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் திருப்பூர் குமரன் சிலை முன்பிருந்து மாநகராட்சி வரை பாஜ சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் நயினார் நாகேந்திரனை, திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சின்னச்சாமி, அனுப்பர்பாளையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் அவரது சகோதரர் மந்திரம் ஆகியோர் பணி நேரத்தில் தனிப்பட்ட முறையில் சீருடையில் நயினாரை ஓட்டலில் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு சென்றது. இதையடுத்து அவர் தலைமை காவலர்கள் சின்னச்சாமி மற்றும் மந்திரம் ஆகியோரை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.