Sunday, April 21, 2024
Home » பாஜ நிர்வாகி காரில் மோடி படம் அச்சிடப்பட்ட கவருடன் ரூ.75,860 சிக்கியது

பாஜ நிர்வாகி காரில் மோடி படம் அச்சிடப்பட்ட கவருடன் ரூ.75,860 சிக்கியது

by Karthik Yash

லால்குடி: திருச்சி அருகே வாகன சோதனையில் பாஜ மாவட்ட தலைவர் காரில் மோடி படம் அச்சிடப்பட்ட கவருடன் இருந்த ரூ.75,860ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் மடக்கினர். பின்னர் காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த பாஜ எஸ்சி, எஸ்டி பிரிவின் மாவட்ட தலைவர் ஜெகநாதன் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து காரில் சோதனை நடத்தியபோது அதில் மறைத்து வைத்திருந்த ரூ.75,860 ரொக்கம் மற்றும் பிரதமர் மோடி படம் அச்சிடப்பட்ட கவரும் கட்டு, கட்டாக இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர், கவரில் பணம் போட்டு வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கொண்டு வரப்பட்டதா என ஜெகநாதனிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் ரொக்கப்பணம் மற்றும் கவர் ஆகியவற்றை பறிமுதல் செய்து லால்குடி தாசில்தார் முருகனிடம் ஒப்படைத்தனர்.

You may also like

Leave a Comment

three × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi