Friday, March 1, 2024
Home » பாஜக கூட்டணிக்கு 4-வது முறையாக மாறி, பீகார் முதலமைச்சராக 9-வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்

பாஜக கூட்டணிக்கு 4-வது முறையாக மாறி, பீகார் முதலமைச்சராக 9-வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்

by Suresh

பாட்னா: பாஜக கூட்டணிக்கு 4-வது முறையாக மாறி, பீகார் முதலமைச்சராக 9-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். இன்று காலை பதவியை ராஜினாமா செய்த நிலையில், பாஜக ஆதரவுடன் தற்போது பதவியேற்றார்.

பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் இன்று காலை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் கொடுத்தார். மேலும் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அறிவித்தார்.

பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் இன்று மதியம் 3 மணிக்கு மேல் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பதிவியேற்பார் என முன்னாள் முதல்வரும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி கூறியிருந்தார்.

மேலும் இன்று காலை நிதிஷ்குமார் கூறியதாவது; இந்தியா கூட்டணியில் இருந்து நான் தற்போது விலகி, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார். பல்வேறு தரப்பிலிருந்தும் காங்கிரஸ் கூட்டணியை முறிக்குமாறு வந்த கோரிக்கையை ஏற்று ராஜினாமா செய்துள்ளேன். எதிர்க்கட்சிகளை இணைக்கும் பணிகளை நான் செய்து வந்தேன், ஆனால் மற்றவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நிதிஷ்குமார் பேட்டி அளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்றார்.கடந்த 23 ஆண்டுகளில் 4வது முறையாக பாஜக கூட்டணிக்கு மாறி, 9வது முறையாக முதலமைச்சரானார். பாட்னாவில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமார், துணை முதல்வராக பதவியேற்ற சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “பீகாரில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் எந்தக் கல்லையும் விட்டு வைக்காது.

நிதிஷ்குமார் முதல்வராகவும், துணை முதல்வராக பதவியேற்ற சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ​ எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குழு எனது மாநிலத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் என்று நான் நம்புகிறேன்” என பிரதமர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

19 + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi