திருநெல்வேலி: பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமின் வழங்கி அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆழ்வார்குறிச்சி போலீசார் பதிவு செய்த வழக்கில் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அமர்பிரசாத் ரெட்டி ஆஜர்படுத்தப்பட்டார். ஆழ்வார்குறிச்சியில் கடந்த செப்.3-ம் தேதி பாஜக சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் இருந்து தொடங்கி கடையத்தில் பாத யாத்திரை நிறைவு பெற்றது.