சென்னை: வார்த்தைகளை அளந்து பேசுங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக ஆட்சி ஊழல்களை மக்கள் மன்றத்தில் அடுக்குவோம். உங்கள் மீது இருக்கும் ஊழல் வழக்குகளை மக்கள் மன்றத்தில் அடுக்குவோம். அதிமுகவினர் மீதுள்ள வழக்குகளை துரிதப்படுத்த நீதிமன்றங்களை நாடுவோம். எடப்பாடியை தலைவராக மக்கள் ஏற்காததால் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சிக்கின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் 4ஆவது இடத்தை அதிமுக ரிசர்வ் செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.