புதுடெல்லி: பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நவ குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜ மூத்த தலைவரும், முன்னாள் துணைபிரதமருமான எல்.கே.அத்வானியின் வயது 96. இவர் சிறுநீரகம் தொடர்பான பிரச்னை காரணமாக கடந்த ஜூன் 26ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டுநாள் சிகிச்சைக்கு பிறகு ஜூன் 28ம் தேதி வீடு திரும்பினார்.
இதைதொடர்ந்து கடந்த மாதம் 5ம் தேதி அத்வானிக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அன்று மதியம் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நரம்பியல்துறையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் அன்று மாலையே வீடு திரும்பினார். இந்நிலையில் அத்வானிக்கு நேற்று மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நரம்பியல்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.