சென்னை: பாஜகவின் அரசியல் கருவியாக வருமானவரித்துறை பயன்படுத்தப்படுவதாக முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தியுள்ளது. சோதனை நடவடிக்கையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக பின்பற்ற வேண்டியதை வருமானவரித்துறை அலட்சியப்படுத்தியுள்ளது. எவர் ஒருவர் மீதும் வரும் புகார்களை சட்ட விதிமுறைகளின்படி விசாரிக்க வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.