புதுடெல்லி: 6 மாநிலங்களில் காலியாக இருந்த 7 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது .இந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் மட்டுமே பாஜ வெற்றி பெற்றது. மீதமுள்ள 4 தொகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கையை குறிப்பிட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பதிவில்,‘‘இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. இது தான் பாஜ பீதியடைவதற்கான காரணமாகும். இது தான் நாட்டின் பெயரை பாஜ மாற்ற விரும்புவதற்கான காரணமாகும்” என்றார்.