Sunday, October 1, 2023
Home » பழங்குடியின இளைஞரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏ மகன் தலைமறைவு: மத்திய பிரதேசத்தில் பயங்கரம்

பழங்குடியின இளைஞரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏ மகன் தலைமறைவு: மத்திய பிரதேசத்தில் பயங்கரம்

by Neethimaan

போபால்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏ மகனை போலீசார் தேடி வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராம்லல்லு வைஷின் மகன் விவேகானந்த் வைஷ் என்பவர், முன்விரோதம் காரணமாக சிங்ராலி பகுதியில் வசிக்கும் பழங்குடியின இளைஞர் சூர்யா கைர்வாரிடம் தகராறு செய்தார். திடீரென தனது கையில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் விவேகானந்த் வைஷ், சூர்யா கைர்வாரை நோக்கிச் சுட்டார். படுகாயமடைந்த சூர்யா கைர்வாரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சூர்யா கைர்வாரிடம் பெறப்பட்ட புகாரின் பேரில், எம்எல்ஏவின் மகன் விவேகானந்த் வைஷ் மீது மோர்வா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள விவேகானந்த் வைஷை போலீசார் தேடி வருகின்றனர். எம்எல்ஏவின் மகன் விவேகானந்த் வைஷ், ஏற்கனவே துப்பாக்கிச் சூடு வழக்குகளில் தொடர்புடைவர் ஆவார். கடந்த 2020ல் முன்விரோதம் காரணமாக பாஜக மண்டல் தலைவரை துப்பாக்கியால் சுட்டார்.

அதன்பின் 2022ல், நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி, வன ஊழியர்களைத் தாக்கியது மட்டுமல்லாமல், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அப்போது கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் வெளியே வந்த நிலையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?