கோபால்பட்டி: பாஜ பிரமுகர் சரமாரியாக கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே ராஜக்காபட்டி ஊராட்சி கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ரண்டக் பாலன் என்ற பாலகிருஷ்ணன் (47). பாஜ ஒன்றிய முன்னாள் நிர்வாகி. திருமணமாகாத இவர் பல்வேறு தொழில்கள் செய்து வந்தார். இவர் நேற்று மாலை மடூர் பிரிவு அருகே டூவீலரில் சென்றபோது அவ்வழியே 2 டூவீலர்களில் வந்த மர்மநபர்கள் இவரை வழிமறித்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, தொழில் போட்டியால் கொலை நடந்ததா அல்லது முன்விரோதத்தால் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜ பிரமுகர் படுகொலை
0