புதுச்சேரி: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் 11 ஆண்டு கால சாதனை விளக்க புத்தக்கத்தை புதுச்சேரி பாஜ தலைமை அலுவலகத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மோடி தலைமையிலான அரசின் கொள்கை முடிவுகளால் நாடு வளர்ச்சி பெற்றுள்ளது கண்கூடாக தெரிகிறது. 2நாடு சுதந்திரம் அடைந்து 100வது ஆண்டை 2047ல் அடியெடுத்து வைக்கும்போது இந்தியாவை வல்லரசாக்க திட்டமிட்டு பிரதமர் செயல்பட்டு வருகிறார். ராகுல்காந்தி கண்களை மூடிக்கொண்டு கருத்து தெரிவிக்கிறார். அவர் கண்ணை திறந்து நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி இல்லாமல் சந்தித்து கணிசமான வாக்குகளை பெற்றுள்ளோம். தற்போது கூட்டணி அமைந்துள்ளதால் பலம் பெற்றுள்ளோம். திருப்பரங்குன்றம் முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார். மெரூன் நிற ெதாப்பி ஏன்?: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மெரூன் நிற தொப்பியை அணிந்திருந்தார். இதுபற்றி நிருபர்கள் கேட்டதற்கு சமீபத்தில் மொட்டை அடித்த நிலையில், நண்பர் அளித்த தொப்பியை அணிந்து கொண்டிருக்கிறேன் என்றார். தொப்பியில் வேல் சின்னம். முருக பக்தர்கள் மாநாட்டுக்காகவா? என கேட்டபோது, இனிமேல் யார்? கேட்டாலும் அப்படியே சொல்லிவிடுகிறேன் என்றார்.