சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர், ஜக்கம்மாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்லமணி. இவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்குவது தொடர்பாக, உத்தமபாளையத்தைச் சேர்ந்த பாஜ மண்டல தலைவர் மாரிராஜாவை (30) அணுகியுள்ளார். அப்போது அவர், அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.4.50 லட்சம் செலவாகும் என கூறியுள்ளார். இதை நம்பிய செல்லமணி, அவரிடம் ரூ.4.50 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் மாரிராஜா கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து சின்னமனூர் காவல்நிலையத்தில் செல்லமணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் மாரிராஜாவை கைது செய்தனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: பாஜ நிர்வாகி கைது
0
previous post