திருப்புத்தூர்: தமிழத்தில் பாஜக கனவு ஒருபோதும் பலிக்காது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் நேற்று இரவு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சாமி பெயரை சொல்லி வடமாநிலங்களை கைப்பற்றியது போல, தமிழ்நாட்டிலும் எடுபடும் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள். அவர்களது கனவு ஒருபோதும் பலிக்காது. கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறுகிறார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி தனித்து ஆட்சி அமைப்போம் என்கிறார். பாஜ பிடியில் அதிமுக உள்ளது. குடும்ப உறவினர்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினர்.