சென்னை: பாஜகவுடன் திமுகவுக்கு ரகசிய உறவு இருப்பதாக திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமி கிளப்பி விடுகிறார், தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய அரசுடன் திமுக உடன்பட்டு போவதற்கு வாய்ப்பே இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஒரு விழா நடந்ததை காரணம் காட்டி ரகசிய உடன்பாடு இருப்பதாக கூறுவது சரியல்ல என கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.