Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

‘பாஜவுடன் தவெக கூட்டா?’

மதுரை: தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருன்ராஜ், மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக்கழக தேர்தல் அறிக்கையில் ஏற்றுமதி தொழிலை ஊக்குவிப்பதற்கு தனியாக மேம்பாட்டு வாரியம் அமைப்பது குறித்து அறிவிப்பு இடம்பெறும். ஈரோட்டில் தவெக பிரச்சார கூட்டம் திட்டமிட்டபடி கண்டிப்பாக நடக்கும்.

அதிமுகவில் இருந்து வேறு தலைவர்கள் யாரும் தவெகவுக்கு வருவார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அரசியல் கட்சிகளை சாதாரணமாக எடை போடக்கூடாது. தவெகவுடன் யார், எப்போது கூட்டணிக்கு வர வேண்டுமோ, அப்போது வருவார்கள். கொள்கை எதிரியான பாஜவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவித உறவும் கிடையாது.

இவ்வாறு கூறினார்.