சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தால் அதிமுக பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாமக்கல் டவுன் பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடக்க இருந்தது. அண்ணாமலை இன்று மாலை நாமக்கல் நகரில் நடைபயணம் மேற்கொள்வதால் அதிமுக பொதுக்கூட்டம் ரத்து என தகவல் வெளியாகியுள்ளது.