சென்னை: சென்னையில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்ற வடசென்னை பாஜக பாஜக கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் சாமுண்டீஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார். ஜெராக்ஸ் கடைக்கு வருவோரின் பத்திரப்பதிவு ஆவணத்தில் பெயரை மாற்றி மோசடி செய்தது அம்பலமானது. போலி ஆவணம் மூலம் மின் இணைப்பு, சொத்து வரி என பெயர் மாற்றம் செய்து சொத்தை அபகரிக்க முயற்சி செய்துள்ளார். வாடகைக்கு இருந்த இடத்தை தனது சொத்தாக மாற்ற போலி ஆவணங்களை தயார் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நிலத்தை அபகரிக்க முயற்சி: வடசென்னை பாஜக மகளிரணி நிர்வாகி கைது
0
previous post