சென்னை: விமர்சனங்கள் என்னை பக்குவப்படுத்தும்; பாஜக போன்ற சோஷியல் வைரஸை தான் நாம் எதிர்த்து நிற்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு – நம் இலக்கு கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை செனாய் நகரில் சமூக வலைதள தன்னார்வலர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றிவருகிறார். பக்குவப்பட்ட காலத்தில் பிறந்தவன் ஸ்டாலின் என என்னை கலைஞர் கூறினார். பேசிப்பேசி எழுதி எழுதி வளர்ந்த இயக்கம் திமுக. பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்துத் தந்த பாதையில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சமூக ஊடகங்களில் திமுகவின் கொள்கை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
சமூக ஊடகங்களில் நமது கருத்துகள் சில நொடியில் கோடிக்கணக்கானோரை சென்றடைந்து விடுகிறது. அவதூறும் பரப்பும் நோக்கிலேயே எதிரணியினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழர்களை தலைநிமிர வைக்க பிறந்த இயக்கம்தான் திராவிட இயக்கம். எதிர்மறை விமர்சனம் மூலம் எதிரிகளை வீழ்த்துவதை விட நேர்மறை விமர்சனம் மூலம் கட்சியை வளர்ப்பதே சரியானது. சமூக வலைதள வசதிகளையும் வாய்ப்புகளையும் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமூகத்தை பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருந்த நோய்க் கிருமிகளை அழிக்க உருவானதுதான் திராவிட இயக்கம். எதிரணியினர் பரப்பும் அவதூறுகள் பொம் என்பதை சமூக வலைதளங்களில் நாம் நிரூபிக்க வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுடைய கருத்துகளை எளிதில் அறிய முடிகிறது.
திமுகவை கற்பனையில் கூட அழிக்க முடியாது
திமுகவை கற்பனையில் கூட யாராலும் அழிக்க முடியாது. அதிமுக,
பாஜக, அதிமுக வெகுஜன விரோதிகள்
பாஜக போன்ற வெகுஜன விரோதிகளுடன் தற்போது நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். ஜாதி, மதத்தால் பிளவுப்படுத்துகின்ற கூட்டத்தை எதிர்த்து நாம் மோதிக் கொண்டிருக்கிறோம்.
பாஜகவின் கொள்கை நாட்டுக்கே எதிரானது
பாஜகவின் பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக அடகு வைத்துள்ளது. பாஜகவுடன் இருந்தால் முற்றிலும் ஒழிக்கப்படுவோம் என்று பயந்து அதிமுக உள்ளே வெளியே ஆடுகிறது. நாணயமில்லாத நாணயத்தின் இருபக்கங்கள்தான் அதிமுகவும், பாஜகவும்.
வாட்ஸ் ஆப் யுனிவர்சிட்டியை மட்டும் நம்புகிறது பாஜக
மிரட்டல், உருட்டல்கள் எல்லாம் திமுகவை எதுவும் செய்ய முடியாது என்பதால் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். போகிற போக்கில் யார் மீது வேண்டுமானாலும் அவதூறு பரப்பலாம் என்ற நோக்கத்தில் பாஜக செயல்படுகிறது. பாஜகவினருக்கு தெரிந்த ஒரே யுனிவர்சிட்டி வாட்ஸ் ஆப் யுனிவர்சிட்டிதான்.
“ஆரிய ஆதிக்கத்துக்கே எதிரி, ஆன்மிகத்துக்கு அல்ல”
ஆரிய ஆதிக்கத்துக்குதான் எதிரியே தவிர ஆன்மிகத்துக்கு எதிரானவர்கள் அல்ல. எனது மனைவி எந்த கோயிலுக்கு போகிறார் என்பதை கண்காணிப்பதே பலரது வேலையாக உள்ளது. கோயிலும் பக்தியும் அவரவர் விருப்பம், அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. கோயில்கள் கொடியவர்களின் கூடாராமாக ஆகிவிடக் கூடாது என்பது மட்டுமே எங்களின் நிலைப்பாடு.
1000கோயில்களுக்கு குடமுழுக்கு செய்தது திமுக ஆட்சி
1000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்த ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. ரூ.5000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்ட ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.
“கோயில்களை பராமரிப்பது பாஜகவுக்கு பிடிக்கவில்லை’
கோயில்களை இடித்துவிட்டதாக பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு அவதூறு பரப்புகிறார்கள் பாஜகவினர். கோயில்களை முறையாக பராமரித்தால் அதனை வைத்து குளிர்காய விரும்பும் மதவெறி கும்பலுக்கு பிடிக்கவில்லை. சமூக வலைதளங்கள் ஒரேநாளில் புகழின் உச்சிக்கும் கொண்டு செல்லும், ஒரேநாளில் கீழேயும் இறக்கிவிடும். எதிரிகள் இழிவு செய்தாலும் கண்ணியமாக பதிலடி தர வேண்டும்.