சென்னை: சுதந்திர தினத்தையொட்டி பாஜக இருசக்கர வாகன பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தேசியக் கொடியை ஏந்திச் செல்வதை தடுக்கக் கூடாது என காவல்துறை இயக்குநர் அறிவிக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். “தேசியக் கொடியை எடுத்துச் செல்வோர் அதன் கண்ணியம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சாலையை தெரிவித்து அனுமதி பெறலாம் என்று ஐகோர்ட் கூறியுள்ளது.