சென்னை: பாஜகவிடம் அடமானம் வைக்கப்பட்டது அண்ணா திமுக; தற்போதுள்ளது அமித் ஷா திமுக என்பது நிரூபணம் என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு எதிர்க்கட்சி தகுதியும் இனி பறிபோகும் நிலையே ஏற்படும். அண்ணா, திராவிடம் என்பதை நீக்கிவிட்டு அமித் ஷா முன்னேற்ற கழகம் என பெயர் சூட்டிக் கொள்ளலாம். இந்து முன்னணியினருக்கு தமிழ்நாட்டில் மட்டும் முருகக் கடவுள் மீது அப்படி என்ன அசாத்திய அன்பு?. அதிமுக கண்டனம் என்ற பெயரில் ஒப்புக்காக ஒரு நான்கு வரி அறிக்கை வெளிவருகிறது என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாஜகவிடம் அடமானம் வைக்கப்பட்ட அதிமுக: கி.வீரமணி விமர்சனம்
0