சென்னை: நாளை மறுநாள் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். கூட்டணி முறிவை அதிமுக அறிவித்துள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.