சென்னை: ஜாமின் கோரி பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தாக்கல் மனு மீதான விசாரணையை சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்தது. பொது சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். அமர்பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிய நிலையில் விசாரணையை நவம்பர் 10க்கு ஒத்திவைத்தது .