சென்னை: பாஜகவுக்காக அதிமுக தவம் இருக்கும் சூழல் உருவாகி உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது;
பாஜகவால் தோல்வி என்றோர் எங்களுக்காக காத்திருப்பு
பாஜகவால் தோற்றோம் என்று கூறியவர்கள் எங்களுக்காக காத்திருக்கின்றனர். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என கூறியவர்கள் தங்களுக்காக காத்திருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜகவுக்காக அதிமுக தவம் இருக்கிறது: அண்ணாமலை
பாஜகவுக்காக அதிமுக தவம் இருக்கும் சூழல் உருவாகி உள்ளதாக அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக குறித்து அண்ணாமலை காட்டமாக விமர்சனம்
அதிமுக என்று குறிப்பிடாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். இக்கட்டான சூழலில் வந்த டிடிவி தினகரனை இப்போது எப்படி கழற்றிவிட முடியும்? என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும்: அண்ணாமலை
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும். பழனிசாமியை முதலமைச்சராக ஏற்போருடன்தான் கூட்டணி என கருத்து கூறியிருந்தார் ஆர்.பி.உதயகுமார். 2021 தேர்தலுக்கு பின் பாஜகவை நோட்டா கட்சி என விமர்சித்தது யார்? என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி பலமாகி கொண்டு இருக்கிறது
தேசிய ஜனநாயக கூட்டணி பலமாகி கொண்டு இருக்கிறது. பாஜக தீண்டத்தகாத கட்சி என்ற தொனியில் அதிமுகவினர் விமர்சித்ததையும் குறிப்பிட்டு அண்ணாமலை ஆவேசமாக கூறினார். அதிமுக எங்களுக்கு எதிரி கட்சி அல்ல என இரு தினங்களுக்கு முன் கூறியிருந்த நிலையில் அண்ணாமலை திடீர் விமர்சனம் செய்துள்ளார்.